/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4 பேர் பலியான விவகாரம் இன்ஸ்., - எஸ்.ஐ., இடமாற்றம்
/
4 பேர் பலியான விவகாரம் இன்ஸ்., - எஸ்.ஐ., இடமாற்றம்
4 பேர் பலியான விவகாரம் இன்ஸ்., - எஸ்.ஐ., இடமாற்றம்
4 பேர் பலியான விவகாரம் இன்ஸ்., - எஸ்.ஐ., இடமாற்றம்
ADDED : அக் 23, 2025 12:47 AM
ஆவடி: நாட்டு வெடி வெடித்து நான்கு பேர் உயிரிழந்த விவகாரத்தில், பட்டாபிராம் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட மூவர், பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆவடி அடுத்த பட்டாபிராமில் கடந்த 18ம் தேதி, வீட்டில் பதுக்கி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி வெடித்து, திருநின்றவூர் சுனில் பிரகாஷ், 23, யாசின், 25, ஆரணியைச் சேர்ந்த சுமன், 22, சஞ்சய், 22, ஆகியோர், உயிரிழந்தனர். இவர்கள் நாட்டு வெடி வாங்க வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில், நாட்டு வெடி விற்பனையில் ஈடுபட்ட விஜயன் தலைமறைவானார். அவரது தந்தை ஆறுமுகம், நண்பர் தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சட்டவிரோதமாக நடந்த நாட்டு வெடி விற்பனையை தடுக்க தவறிய பட்டா பிராம் சட்டம் - ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் கிருஷ்ணராஜ், காட்டூர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.
மேலும், எஸ்.ஐ., ஹரிஷ் திருப்பாலைவனம் காவல் நிலையத்திற்கும், நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் ரமேஷ், ஆவடி கமிஷனரக காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் பணியிடமாற்றம் செய்து, கமிஷனர் சங்கர் நேற்று உத்தரவிட்டார்.