/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜூலையில் நீர் திறப்பு ஆந்திராவிடம் வலியுறுத்தல்
/
ஜூலையில் நீர் திறப்பு ஆந்திராவிடம் வலியுறுத்தல்
ADDED : மார் 08, 2024 12:11 PM
சென்னை,சென்னையின் குடிநீர் தேவைக்கு ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, ஆந்திர அரசு வழங்க வேண்டும். இதில், ஜன., முதல் ஏப்ரல் வரை, 4 டி.எம்.சி.,யும், ஜூலை முதல் அக்டோபர் வரை, 8 டி.எம்.சி.,யும் வழங்க வேண்டும்.
அதன்படி, 2023 - 24 நீர் வழங்கும் காலத்தில், 2.41 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டு உள்ளது. தற்போது, கிருஷ்ணா கால்வாய் மட்டுமின்றி, பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் செல்லும் இணைப்பு கால்வாய், சோழவரத்தில் இருந்து புழலுக்கு நீர் செல்லும் பேபி கால்வாய் ஆகியவற்றில், புனரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.
சென்னையின் கோடைக்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலும், நீர் இருப்பு உள்ளது. எனவே, ஜூலை மாதத்தில் கிருஷ்ணா நீரை திறக்கும்படி, ஆந்திர நீர்வளத் துறையிடம், தமிழக நீர்வளத் துறை வலியுறுத்தி உள்ளது.

