/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.250 கோடியில் துணை மின் நிலையம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

ADDED : மார் 31, 2025 03:06 AM
சென்னை,:திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டியில் 256.45 கோடி ரூபாய் செலவில், 230/ 110 கிலோ வோல்ட் திறனில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் கட்டுமான பணி, 2023 ஜூலையில்துவக்கப்பட்டது. தற்போது கட்டுப்பாட்டு அறைகள் பணி, 95 சதவீதமும், துணை மின் நிலைய கட்டுமான பணி, 75 சதவீதமும் முடிவடைந்துள்ளன.
பஞ்செட்டி துணைமின் நிலைய கட்டுமான பணிகளை, மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்திஉள்ளார்.
மீதம் உள்ள பணிகளை விரைந்து முடித்து வரும் ஆகஸ்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள 230 கி.வோ., துணை மின் நிலையம் மற்றும் கும்மிடிப்பூண்டி 230 கி.வோ., துணைமின் நிலையத்திலிருந்து பஞ்செட்டி துணைமின் நிலையத்திற்கு மின்சாரம் எடுத்து வரப்படும்.
அங்கிருந்து, 110 கி.வோ., திறன் உடைய கும்மிடிப்பூண்டி சிப்காட், தேர்வாய்கண்டிகை, சோத்துபெரும்பேடு, பஞ்செட்டி, பொன்னேரி, மேலுார், அலமாதி மற்றும் பெரியபாளையம் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு கூடுதல் மின்சாரம் எடுத்து வரப்பட்டு, அவற்றின் வழியாக பல பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படும்.