sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சோழிங்கநல்லுாரில் அமைகிறது ஒருங்கிணைந்த அரசு வளாகம்

/

சோழிங்கநல்லுாரில் அமைகிறது ஒருங்கிணைந்த அரசு வளாகம்

சோழிங்கநல்லுாரில் அமைகிறது ஒருங்கிணைந்த அரசு வளாகம்

சோழிங்கநல்லுாரில் அமைகிறது ஒருங்கிணைந்த அரசு வளாகம்


ADDED : மே 27, 2025 12:18 AM

Google News

ADDED : மே 27, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் தொகுதி, தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்டதாகவும், சென்னை மாவட்டத்தில் அதிக பரப்பு கொண்ட தாலுகாவாகவும் உள்ளது.

ஐ.டி., நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. ஆனால், இங்குள்ள பெரும்பாலான பகுதிகள் நீர்நிலையாக உள்ளதால், அரசு துறை அலுவலகங்களுக்கு சொந்த இடம் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது.

பல துறைகள், வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன. செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டி, ஐந்து ஆண்டுக்கு மேலாகியும், நீர்நிலை என்பதால் பயன்பாட்டுக்கு வரவில்லை.

இதர துறைகளுக்கு இடம் தேர்வு செய்து வழங்கும் சோழிங்கநல்லுார் தாலுகாவே, பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது.

வெவ்வேறு பகுதியில் தனித்தனியாக செயல்படும் அரசு துறைகளை, பொதுமக்கள் நாடுவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.

இதனால், அனைத்து துறைகளையும் ஒரே வளாகத்தில் கொண்டு வர வேண்டும் என, தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், சட்டசபையில் பலமுறை பேசினார்.

இந்நிலையில், சோழிங்கநல்லுார் தாலுகா அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், உணவு பொருள் வழங்கல் துறை உதவி கமிஷனர், கருவூலம், பத்திரப்பதிவு, கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அரசு துறைகள், சோழிங்கநல்லுாரில் ஒரே வளாகத்தில் அமைய உள்ளன.

சோழிங்கநல்லுார் தாலுகா, 439/2ல், 8 ஏக்கர் அரசு இடம் உள்ளது. இந்த இடத்தில், 2 ஏக்கர் சோழிங்கநல்லுார் தாலுகா அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

மீதமுள்ள இடங்கள், இதர துறைகளுக்கு ஒதுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாக, அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us