/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட்டில் தீவிர சோதனை விமானங்கள் தொடர் தாமதம்
/
ஏர்போர்ட்டில் தீவிர சோதனை விமானங்கள் தொடர் தாமதம்
ஏர்போர்ட்டில் தீவிர சோதனை விமானங்கள் தொடர் தாமதம்
ஏர்போர்ட்டில் தீவிர சோதனை விமானங்கள் தொடர் தாமதம்
ADDED : நவ 20, 2025 03:21 AM
சென்னை: டில்லியில் நடந்த பயங்கரவாத கார் குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து , இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு, சமீப நாட்களாக தொடர் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் பதிவாகி வருவதால், பயணியரிடம் சோதனைகளும் கூடுதலாக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக, பயணியர் எடுத்து வரும் அனைத்து பொருட்களையும், 'ஸ்கேன்' செய்து மீண்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
பயணியரின் ஷூக்கள், ஸ்வெட்டர்கள் ஆகியவை கழற்றி, பாதுகாப்பு சோதனை பகுதியில் உள்ள 'ட்ரே'வில் வைப்பதில், தாமதம் ஏற்படுகிறது.
இதன் காரணமாக, பயணியர் விமானங்களில் ஏறுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால், சென்னையில் இருந்து வெளி நாடுகளுக்கு புறப்படும் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டு வருவது, வாடிக்கையாகி உள்ளது.
இதுபோன்ற காரணங் களால், சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலை, ஜெர்மன் நாட்டின் பிராங்க்பார்ட் நகருக்கு செல்லும் விமானம், துபாய், கோலாலம்பூர், சிங்கப்பூர், தோஹா, தாய்லாந்து, சார்ஜா, அபுதாபி, மஸ்கட் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்கள், 45 நிமிடங்களில் இருந்து, ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டன.
பாதுகாப்பு சோதனைகளுக்கு ஏற்ப மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக சி.ஐ.எஸ்., விமான நிலைய பிரிவு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

