/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகால் பணி முடியாததால் உள்ளகரத்தில் சிக்கல்
/
வடிகால் பணி முடியாததால் உள்ளகரத்தில் சிக்கல்
ADDED : மார் 14, 2024 12:29 AM

பெருங்குடி மண்டலம், வார்டு 185க்கு உட்பட்ட உள்ளகரத்தில், இரண்டு மாதங்களாக மழைநீர் வடிகால் கட்டுமான பணி நடக்கிறது. இங்கு, கஸ்துாரிபாய் தெரு, பிளாட் எண்: 10ல், குடியிருப்புகள் நடுவே சிதிலமடைந்த ஒரு மின் கம்பம் உள்ளது.
இந்த மின் கம்பம் இருக்கும் பகுதிக்கு, இடதுபுறமும், வலதுபுறமும் 10 அடி துாரத்திற்கு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கால்வாய் அமைக்க பயன்படுத்திய கட்டுமான கம்பிகள், பள்ளத்திலிருந்து வெளியே நீட்டியபடி உள்ளதால், குடியிருப்பை விட்டு வெளியே வருவோர், பள்ளத்திலோ, கம்பிகள் மீதோ விழுந்து, காயமடையும் நிலை உள்ளது.
தவிர, குடியிருப்பில் உள்ளோர், 20 நாட்களுக்கும் மேலாக வீட்டின் 'பார்க்கிங்' பகுதியில் இருந்து வாகனத்தை வெளியே எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்னையை தீர்க்க வேண்டும்.
- நாராயணன், பெருங்குடி

