/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வதேச பலுான் திருவிழா சென்னையில் இன்று துவக்கம்
/
சர்வதேச பலுான் திருவிழா சென்னையில் இன்று துவக்கம்
ADDED : ஜன 10, 2025 12:24 AM
சென்னை,தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில், நடப்பாண்டில் சென்னை, பொள்ளாச்சி, மதுரை ஆகிய நகரங்களில் இன்று துவங்கி வரும் 19ம் தேதி வரை, 10 நாட்கள் பலுான் திருவிழா நடக்கிறது.
சென்னையில், கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தையில் இன்று முதல் மூன்று நாட்கள்பலுான் திருவிழா நடக்கிறது. இதில், தாய்லாந்து, பெல்ஜியம், பிரேசில், வியட்நாம், ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த, விதவிதமான ராட்சத பலுான்கள் இடம் பெறுகின்றன.
பொதுமக்கள் பிற்பகல் 3:00 முதல் இரவு 9:30 மணி வரை அனுமதிக்கப்படுவர். குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் 200 ரூபாய் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.tnibf.com இணையதளத்தின் வாயிலாக, டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

