/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வதேச சதுரங்க போட்டி: தமிழக வீரர் 'சாம்பியன்'
/
சர்வதேச சதுரங்க போட்டி: தமிழக வீரர் 'சாம்பியன்'
ADDED : ஆக 19, 2025 12:34 AM

சென்னை, விகாஷ் மந்திரா பள்ளியில் நடந்த சர்வதேச சதுரங்க போட்டியில், தமிழக வீரர் பார்கவ் கார்த்திகேயன் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார்.
அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு ஆதரவில், ஆர்.வி.,செஸ் அகாடமி மற்றும் விகாஷ் மந்திரா பள்ளி சார்பில், முதலாவது சர்வதேச சதுரங்க போட்டி, மாம்பாக்கத்தில் உள்ள பள்ளியில், கடந்த 15ல் துவங்கி, 17ம் தேதி நிறைவடைந்தது.
போட்டியில், இந்தியா, அமெரிக்கா, எகிப்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 272 சர்வதேச ரேட்டிங் வீரர்கள் உட்பட மொத்தம், 534 வீரர்கள் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிக்கும் சிறப்பு போட்டிகள் நடந்தன.
அனைத்து போட்டிகள் முடிவில், தமிழக வீரர் பார்கவ் கார்த்திகேயன் மற்றும் மஹாராஷ்டிராவின் அனிருத் சுப்ரமணியன், கடைசி சுற்றில் தலா எட்டு புள்ளிகள் பெற்று முதலிடங்களை பிடித்தனர். 'டை பிரேக்' அடிப்படையில் தமிழக வீரர் பார்கவ் கார்த்திகேயன் முதலிடத்தை பிடித்தார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, மியான்மர் நாட்டின் கவுரவ துாதர் ரங்கநாதன், விகாஷ் மந்திரா பள்ளி கல்வி ஆலோசகர் மாலதி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.