/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் மே 21ல் துவங்குகிறது சர்வதேச காற்றாடி விடும் திருவிழா
/
சென்னையில் மே 21ல் துவங்குகிறது சர்வதேச காற்றாடி விடும் திருவிழா
சென்னையில் மே 21ல் துவங்குகிறது சர்வதேச காற்றாடி விடும் திருவிழா
சென்னையில் மே 21ல் துவங்குகிறது சர்வதேச காற்றாடி விடும் திருவிழா
ADDED : ஏப் 24, 2025 12:11 AM
சென்னை, வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகையை அதிரிக்கும் வகையில், தமிழக சுற்றுலாத்துறை சார்பில், 2022ம் ஆண்டு முதல் சர்வதேச காற்றாடி விடும் திருவிழா, சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.
நான்காம் ஆண்டு சர்வதேச பட்டம் விடும் ஐந்து நாள் திருவிழா, அடுத்த மாதம் 21ம் தேதி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் துவங்க உள்ளது.
இதில், பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்த காற்றாடி தயாரிப்பு நிபுணர்கள், தங்கள் நாட்டு கலாசாரத்தை பிரதிபலிக்கும் ராட்சத காற்றாடிகளுடன் பங்கேற்க உள்ளனர்.
'கடல் வளங்களைக் காப்போம்' என்ற கருப்பொருள் வைக்கப்படுவதால், கடல் வாழ் உயிரினங்களை பிரதிபலிக்கும் டால்பின், நீலத்திமிங்கலம், ஆக்டோபஸ், சுறாமீன் உள்ளிட்ட உயிரினங்களின் உருவங்களில் வடிவமைக்கப்பட்ட, 250க்கும் மேற்பட்ட ராட்சத காற்றாடிகள் பறக்கவிடப்பட உள்ளன.
குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்; பெரியவர்களுக்கு, 200 ரூபாய் நுழைவு கட்டணம்.
இதுகுறித்து, சுற்றுலாத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
தினமும் பிற்பகல் 3:00 மணி முதல் பட்டங்கள் பறக்கவிடப்படும். இரவு 7:00 மணிக்குப்பின், எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்ட, ஜொலிக்கும் காற்றாடிகள் பறக்கவிடப்படும்.
காற்றின் வேகம், வானிலையைப் பொறுத்து அவை இயக்கப்படும். பார்வையாளர்கள் பிற்பகல் 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

