ADDED : மே 31, 2025 03:06 AM

சென்னை:சென்னை சவுந்தரபாண்டியன் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனை சார்பில், சர்வதேச எலும்பு சிகிச்சை மாநாடு, சென்னையில் நடந்தது.
மாநாடு குறித்து, மருத்துவமனை இயக்குனர் சிவமுருகன், ரவி சுப்பிரமணியன் ஆகியோர் பேசியதாவது:
இடுப்பு எலும்பு, மூட்டு எலும்பு மாற்று சிகிச்சைக்கு பொதுவமான உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒரே அளவில் இருப்பதால், சிகிச்சை பெறுவோரில், 20 சதவீதம் பேருக்கு, நடக்க முடியாமல் போவது, தாங்க முடியாத வலி போன்ற பிரச்னைகள் ஏபடுகின்றன.
எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில், சர்வதே எலும்பு சிகிச்சை மாநாடு சென்னையில் நடத்தப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் இடுப்பு மற்றும் எலும்பு மூட்டு சிகிச்சையில் முன்னோடியான, கனடா நாட்டை சேர்ந்த டாக்டர் பேஸ்கல் ஆன்ட்ரி வெண்டிட்டோலி தலைமையில், 150க்கும் மேற்பட்ட மூடநீக்கியல் துறை நிபுணர்கள் ஆலோசனை நடத்தினோம்.
இந்தியாவில் ஆண்டுதோறும், 2.5 லட்சம் அறுவை சிகிச்சைகள் நடந்தாலும், அனைத்தும் வெற்றிகரமாக அமைவது இல்லை. இந்த மாநாட்டில் இதுகுறித்து விவாதித்தோம்.
மனிதனின் உடலுக்கு ஏற்றாற்போல், '3 டி' பிரின்டிங்கில் எலும்பை வடிவமைத்து பொருத்துவது குறித்து விவாததித்தோம்.
மாநாட்டின் வாயிலாக, ஒவ்வொருவருக்கும், அவருக்கு ஏற்றற்போல், மூட்டு மற்றும் இடுப்பு எலும்பு மாற்று வடிவமைத்து, சிகிச்சை அளிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.