/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இண்டர்நேஷனல் ஷாப்பிங் திருவிழா வசீகரிக்கும் கைவினை பொருட்கள்
/
இண்டர்நேஷனல் ஷாப்பிங் திருவிழா வசீகரிக்கும் கைவினை பொருட்கள்
இண்டர்நேஷனல் ஷாப்பிங் திருவிழா வசீகரிக்கும் கைவினை பொருட்கள்
இண்டர்நேஷனல் ஷாப்பிங் திருவிழா வசீகரிக்கும் கைவினை பொருட்கள்
ADDED : மே 30, 2025 12:29 AM

சென்னை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 'இண்டர்நேஷனல் ஷாப்பிங் பெஸ்டிவல்' நடந்து வருகிறது. கண்காட்சியில் தாய்லாந்து தயாரிப்புகள் அதிகம் காணப்படுகிறது.
அந்த நாட்டின் துணிமணிகள், நகைகள், பைகள்,பொம்மைகள் என்று பல பொருட்கள், பார்வையாளர்களை வசீகரிக்கிறது. இது தவிர, பல்வேறு மாநில கைவினைப் பொருட்களும் இடம் பெற்றுள்ளன.
வெளியூர் போகும்போது குறைந்த அளவு நகைகள் எடுத்து செல்பவர்களுக்கு உதவும் வகையில், ஒரு சின்ன லாக்கர் உள்ளது.
இதில், என்ன விசேஷம் என்றால், பார்ப்பதற்கு ஒரு புத்தகம் போலவே இருக்கும்; 'பாஸ்வேர்ட்' போட்டு திறந்தால் மட்டுமே அது லாக்கர் என்பது தெரியும்.
ராஜஸ்தானில் இருந்து பல்வேறு பளிங்கு பொருட்கள் வந்து குவிந்துள்ளன, அதிலும், ராமர் மற்றும் ராதா-கிருஷ்ணா சிலைகள் கொள்ளை அழகு. சூரிய வெளிச்சம் அல்லது விளக்கு வெளிச்சத்தில் இயங்கக்கூடிய குட்டி குட்டியான பொம்மைகள் கொள்ளை அழகு.
இதுதவிர, விதவிதமான பர்னிச்சர் பொருட்கள் உணவுப் பொருட்களும் இடம் பெற்றுள்ளன. கண்காட்சி ஜூன் 2 ம் தேதி வரை நடைபெறுகிறது.
***