/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீடு புகுந்த கொள்ளை கும்பல் சிக்கிய சிறுவனிடம் விசாரணை
/
வீடு புகுந்த கொள்ளை கும்பல் சிக்கிய சிறுவனிடம் விசாரணை
வீடு புகுந்த கொள்ளை கும்பல் சிக்கிய சிறுவனிடம் விசாரணை
வீடு புகுந்த கொள்ளை கும்பல் சிக்கிய சிறுவனிடம் விசாரணை
ADDED : மார் 11, 2024 01:37 AM
அடையாறு:அடையாறு, காமராஜர் அவென்யூ 2வது தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 80; எஸ்.பி.ஐ., வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். தனியாக வசிக்கும் இவர், கடந்த 6ம் தேதி வீட்டு வாசலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, நான்கு பேர், அவரது வாயை பொத்தி வீட்டுக்குள் கொண்டு சென்று, வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
அவரின் அலறல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்ததும் நான்கு பேரும் தப்பி ஓடினர். அடையாறு போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில், அசோக் நகரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் சிக்கினான்.
போலீசார் கூறுகையில், ''சிறுவனிடம் விசாரித்தபோது, சித்தப்பா கார்த்திக், 30, தான் தன்னை அழைத்துச் சென்றார். எதற்கு என்று கூறவில்லை. அங்கு சென்ற பின் தான், தவறான செயலுக்கு அழைத்துச் சென்றது தெரிந்தது என்றார். தனிப்படை அமைத்து கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகிறோம். அவர் சிக்கிய பின் தான் முழு விபரம் தெரியவரும்' என்றனர்.

