/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை பொருள் கடத்திய பெண்ணிடம் விசாரணை
/
போதை பொருள் கடத்திய பெண்ணிடம் விசாரணை
ADDED : மார் 15, 2024 12:32 AM
பாரிமுனை, பாரிமுனை, அரண்மனைக்காரன் தெருவில், எஸ்பிளனேடு போலீசார் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, இளம்பெண்ணும், 16 வயது சிறுமியும், வாலிபர்கள் மூவருடன் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரிக்கச் சென்ற போது, மூன்று இளைஞர்களும் தப்பி ஓடினர். இளம்பெண் மட்டும் சிக்கினார். போலீசார் விசாரித்த போது, அப்பெண் சேலம், வாழப்பாடி, அனுப்பூரைச் சேர்ந்த சரண்யா, 19, என்பதும், சிறுமி சென்னையைச் சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.
பழைய குற்றவாளியான சின்னா என்பவர், சரண்யாவுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார். சேலம் பகுதியில் கிடைக்கும் போதை ஊசி, போதை மாத்திரைகளை சின்னா கேட்க, சரண்யா அவற்றை சென்னைக்கு கொண்டு வந்துள்ளார். சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த அவரிடமிருந்து போதை பொருட்களை வாங்க, சின்னா தன் காதலியான 16 வயது சிறுமி, கூட்டாளிகள் மூவரை அனுப்பியது தெரிந்தது.
எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிந்து, இதுகுறித்து மேலும் விசாரிக்கின்றனர்.

