/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் - செங்கை 4வது பாதை பணி முடிந்ததும் கூடுதலாக 25 ரயில் இயக்கப்படும்: ரயில்வே கோட்ட மேலாளர் பேட்டி
/
தாம்பரம் - செங்கை 4வது பாதை பணி முடிந்ததும் கூடுதலாக 25 ரயில் இயக்கப்படும்: ரயில்வே கோட்ட மேலாளர் பேட்டி
தாம்பரம் - செங்கை 4வது பாதை பணி முடிந்ததும் கூடுதலாக 25 ரயில் இயக்கப்படும்: ரயில்வே கோட்ட மேலாளர் பேட்டி
தாம்பரம் - செங்கை 4வது பாதை பணி முடிந்ததும் கூடுதலாக 25 ரயில் இயக்கப்படும்: ரயில்வே கோட்ட மேலாளர் பேட்டி
UPDATED : டிச 25, 2025 07:59 AM
ADDED : டிச 25, 2025 05:34 AM

சென்னை: 'தாம்பரம் - செங்கல்பட்டு இடையே நான்காவது புதிய ரயில்பாதை அமையும்போது, 25 ரயில்கள் கூடுதலாக இயக்க முடியும்' என, சென்னை ரயில் கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் கூறினார்.
தெற்கு ரயில்வேயில் உள்ள ஆறு கோட்டங்களில், சென்னை ரயில் கோட்டம் முக்கியமானதாக இருக்கிறது. சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு, 300க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், சென்னை புறநகர் பகுதிகளுக்கு, 600 மின்சார ரயில் சேவைகளும் இயக்கப்படுகின்றன.
பயணியர் வசதிக்காக, கூடுதல் பாதைகள் அமைப்பது, ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, சென்னை ரயில் கோட்ட மேலாளர் சைலேந்திர சிங், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:
சென்னை ரயில் கோட்டத்தில், பயணியர் தேவை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ரயில்கள் இயக்கம், ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம் படுத்துவதில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பயணியருக்கு கழிப்பறை வசதி, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகள் செய்ய, தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். விருப்பமுள்ளவர்கள், டெண்டரில் பங்கேற்கலாம்.
அனைத்து ரயில் நிலையங்களுக்கும், வாகன நிறுத்தம் வசதி கொண்டு வருவதே எங்களது இலக்கு. தற்போது, 60 சதவீத ரயில் நிலையங்களில், வாகனம் நிறுத்த வசதி இருக்கிறது. எஞ்சியுள்ள ரயில் நிலையங்களிலும், படிப்படியாக வாகன நிறுத்த வசதி கொண்டுவரப்படும்.
தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, நான்காவது புதிய ரயில் பாதை அமைக்க, 713 கோடி ரூபாய் ரயில்வே வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதையடுத்து, ரயில் பாதைக்கான வரைபடம் தயாரிப்பது, நிலம் கையகப்படுத்துவது போன்ற அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளோம். அடுத்த ஆண்டு ஏப்ரலில், பணிகள் துவக்கி, மூன்று ஆண்டுகளில் முடிக்க திட்ட மிட்டுள்ளோம்.
இந்த பாதை பயன்பாட்டிற்கு வரும்போது, சென்னையில் இருந்து பல்வேறு வழித்தடங்களுக்கு கூடுதலாக, 25 ரயில்கள் வரை இயக்கப்படும். மேலும், புறநகர் மின்சார ரயில்களும் தேவைக்கு ஏற்ப, இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம், ரயில்வேயின் பணிகள் முடித்துவிட்டோம். மாநில அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய அணுகு சாலை அமைப்பது உள்ளிட்ட சில பணிகள் முடிந்தவுடன், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

