UPDATED : ஜூலை 21, 2026 10:18 PM
ADDED : ஜூலை 21, 2026 10:02 PM
போதைப்பொருள், கஞ்சா, மதுபோதை ஆகியவை, சமுதாயத்தை சீரழிக்கும் ஆபத்தானவை. இதுகுறித்து, மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருந்து, நல்ல சமுதாயத்தை உருவாக்க பங்களிக்க வேண்டும்.
போதைப்பொருளுக்கு எதிராக, காவல் துறையின் அனைத்து பிரிவினரும் ஒருங்கிணைந்து, தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளின் முழு, 'நெட்வொர்க்'கையும் கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபகாலமாக போதை மாத்திரைகள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவை எங்கிருந்து வருகிறது; யார் விநியோகம் செய்கின்றனர்; எந்த வகையான குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் என்பதை முழுமையாக கண்டறிந்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- அமல்ராஜ்,
சென்னை போலீஸ் கமிஷனர்.
