/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமிக்கு திருமணம் உறவினர்களிடம் விசாரணை
/
சிறுமிக்கு திருமணம் உறவினர்களிடம் விசாரணை
ADDED : பிப் 17, 2025 01:30 AM
புளியந்தோப்பு: புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, 10ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.
பெற்றோர் இறந்ததால், தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில்,கடந்த 2ம் தேதி சிறுமியின் தாத்தா மற்றும் இரண்டு பாட்டிகள் சேர்ந்து வலுக்கட்டாயமாக, சிறுமிக்கு 30 வயது நபருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
தகவலறிந்த சென்னை மாவட்ட சமூக நலத்துறை, குழந்தை நல அதிகாரி ஜமுனா, 54, நேற்று மாலை கொடுத்த புகாரின் படி, மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, சிறுமியின் தாத்தா, இரண்டு பாட்டிகள், சிறுமிக்கு தாலி கட்டிய 30 வயது நபர் மற்றும் அவரது தாய், தந்தை என, ஆறு பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

