/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண் தீக்குளித்து தற்கொலை கணவரிடம் விசாரணை
/
பெண் தீக்குளித்து தற்கொலை கணவரிடம் விசாரணை
ADDED : நவ 03, 2024 12:32 AM
சென்னை,
குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, அவரது கணவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ராமாபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 40; ஆட்டோ ஓட்டுனர். அவரது மனைவி பிரியங்கா, 35; தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தீபாவளி பண்டிகை அன்று, தம்பதியரிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த பிரியங்கா, வீட்டில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி, தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயமடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாகராமாபுரம் போலீசார், மணிகண்டனிடம் விசாரித்து வருகின்றனர்.