/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஊர்க்காவல் படை தளபதி பதவியில் சேர அழைப்பு
/
ஊர்க்காவல் படை தளபதி பதவியில் சேர அழைப்பு
ADDED : ஜூலை 10, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, 'ஊர்க்காவல் படை துணை மண்டல தளபதி பணியில் சேர விருப்பமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்' என, சென்னை காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இப்பணிக்கு எவ்வித ஊக்கத் தொகையும் வழங்கப்படாது. சென்னையை சேர்ந்த, 18 - 50 வயதிற்கு உட்பட்ட, குற்றப்பின்னணி இல்லாத நபராக இருக்க வேண்டும். ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும்.
தகுதி உள்ளவர்கள், 'சென்னை ஊர்க்காவல் படை தலைமை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம்' என்ற முகவரியில், விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ அனுப்பலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப, ஜூலை 30 கடைசி நாள் என, காவல் துறை வெளியிட்ட தெரிவித்துள்ளது.