/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓ.எம்.ஆரில் 5 பாதைகளுடன் இரும்பு தரைப்பாலம்; மெட்ரோ ரயில் பணிக்காக அமைகிறது மெட்ரோ ரயில் பணிக்காக ரூ.350 கோடியில் அமைகிறது

UPDATED : ஜூலை 13, 2025 07:06 AM
ADDED : ஜூலை 13, 2025 12:09 AM

சென்னை,
ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணிக்கு 'பில்லர்' அமைக்க, ஒக்கியம்மடுவில் உள்ள 300 அடி நீளம், 44 அடி அகல சாலை விரைவில் தகர்க்கப்பட்டு 350 கோடி ரூபாயில் இரும்பு தரைப்பாலம் அமைக்ககும் பணி நடக்கிறது.
தென்சென்னை புறநகர் பகுதியில் உள்ள, 62 ஏரிகள், 200க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் கால்வாய், வடிகால்வாயில் இருந்து வெளியேறும் மழைநீர், துரைப்பாக்கம், ஒக்கியம்மடு வழியாக, பகிங்ஹாம் கால்வாயை அடைந்து, முட்டுக்காடு கடலில் சேர்கிறது.
ஒக்கியம் மடுவின் குறுக்கே, ஓ.எம்.ஆர்., சாலை செல்கிறது. ஒக்கியம்மடுவில் குப்பை, ஆகாயதாமரை மண்டி கிடப்பதால்பலத்த, மழைக்காலத்தில் நீரோட்டம் தடைப்பட்டு, குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பு அதிகரித்தது.
இந்த மடுவை அகலப்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஓ.எம்.ஆரின் மைய பகுதியில், மெட்ரோ ரயில் பாதைக்காக 'பில்லர்' அமைக்கப்படுகிறது. இப்பணிக்காக, மடு பகுதியில், 300 அடி நீள சாலையை தகர்க்க வேண்டும்.
இந்த சாலையை தகர்த்து, 600 அடி நீளம், 22 அடி அகலம் வீதம், மொத்தம் 44 அடி அகலத்தில், சாலையின் இரு மார்க்கங்களிலும் இரும்பு தரைப்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பணி, 350 கோடி ரூபாயில் நடக்கிறது.
இதுகுறித்து, மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:
இரும்பு தரைப்பாலம் அமைக்கும் பணியை, செப்., மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். நீரோட்ட பாதைக்காக, தரைப்பாலத்தின் கீழ், 40 மீட்டர் அகலம் வீதம், ஐந்து நீரோட்ட பாதைகள் அமைக்கப்படுகின்றன.
இதில், மூன்று பாதைகளில் வெள்ளம் வடிந்தோடும். பக்கவாட்டில், தலா ஒரு பாதை மூடி வைக்கப்படும். தேவைக்கு ஏற்ப அவை பயன்படுத்தப்படும். பருவமழை முடிந்த பின், சாலையை தகர்த்து, 'பில்லர்' அமைக்கும் பணி துவங்கும்.
தற்போது, ஓ.எம்.ஆர்., சாலை நான்கு வழி சாலையாக உள்ளது. மெட்ரோ ரயிலுக்கான பில்லர் அமைக்கும் பணி முடிந்த பின், 60 அடி அகலத்தில் ஆறு வழி சாலையாக மாற்றி, இரும்பு தரைப்பாலம் அகலப்படுத்தப்படும்.
பக்கவாட்டில் நடைபாதையும் அமைக்கப்பட உள்ளது. இந்த இரும்பு பாலம் அமைப்பதால், மடுவில் வெள்ள பாதிப்பு தடுக்கப்படும். சாலையும் அகலமாக மாறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.