sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இலவச வீட்டுமனைகள் விற்பனையில்... முறைகேடு பட்டா பெற முடியாமல் மக்கள் தவிப்பு

/

இலவச வீட்டுமனைகள் விற்பனையில்... முறைகேடு பட்டா பெற முடியாமல் மக்கள் தவிப்பு

இலவச வீட்டுமனைகள் விற்பனையில்... முறைகேடு பட்டா பெற முடியாமல் மக்கள் தவிப்பு

இலவச வீட்டுமனைகள் விற்பனையில்... முறைகேடு பட்டா பெற முடியாமல் மக்கள் தவிப்பு


ADDED : ஜூலை 06, 2025 12:03 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 12:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசால் இலவசமாக ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகள், வருவாய் துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் முறைகேடாக, வெவ்வேறு சமூகத்தினருக்கு விற்கப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்தள்ளது. இந்த முறைகேடு காரணமாக, உரிய பயனாளிகள் பட்டா பெற முடியாமல் தவிக்கின்றனர்.

சென்னை மணலி - கொசப்பூரில், (கிராம புல எண், 165/8, 171, 172, 174) ல், பழைய காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின், இந்து நாவிதர் சமூகத்தை சேர்ந்த, 343 பேருக்கு, 2.5 சென்ட் இலவச வீட்டுமனைகள், 1994ல் ஒதுக்கப்பட்டன.

பயனாளிகளுக்கு, 'நில ஒப்படைப்பு பட்டா' வழங்கப்பட்ட நிலையில், ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வசிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஒதுக்கீட்டின்போது, நுாற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசின் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. இதற்கு, தியாகி விஸ்வநாத தாஸ் நகர் என, பெயர் சூட்டப்பட்டது.

அங்கு வசிக்காமல் பல பயனாளிகள் வெளியேறி விட்டதால், அந்த வீடுகள் முற்றிலும் சேதமடைந்து தற்போது, முள்செடிகள் சூழ்ந்துள்ளன.

இந்நிலையில், மனை ஒதுக்கீட்டின் போதே பலர், போலி ஆவணங்களை சமர்பித்து, இலவச வீட்டுமனைகளை பெற்றுள்ளனர். அவர்கள், 10 ஆண்டுகள் கழித்து, மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு, விற்பனை செய்துள்ளனர்.

அதன்படி, ஒதுக்கீடு பெற்ற 343 வீட்டு மனைகளில் தற்போது, 76 வீடுகள் உள்ளன. அதில், 32 பயனாளிகள் மட்டுமே அரசால் முறையான ஒதுக்கீடு பெற்றவர்கள். மீதி உள்ள, 44 வீடுகளில் வசிப்பவர்கள், ஒதுக்கீடு பெற்றவர்களிடம் கிரையம் செய்து இடத்தை வாங்கி, வீடு கட்டி குடியேறியுள்ளனர். தவிர, 267 வீட்டு மனைகள் காலியாகவே உள்ளது.

இதன் உரிமையாளர்களும், சென்னை, திருவண்ணாமலை, திண்டுக்கல், வேலுார், துாத்துக்குடி உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

விதிமுைறைகளை மீறி, முறைடோக மனைகள் விற்பனைக்கு வருவாய் துறையினரும் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குளறுபடி காரணமாக, உரிய ஆணை பெற்று, 32 ஆண்டுகளாக வசித்து வரும் பயனாளிகளுக்கு, நிலத்தின் உரிமையை உறுதி செய்யும் வகையிலான, 'துாய பட்டா' கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

எனவே, வருவாய் துறை அதிகாரிகள், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதன்படி, நிலத்திற்கு உரிமை கோராமலும், ஒதுக்கீடு செய்து ஆறு மாதங்களில் குடியேறாதவர்களின் வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும்.

முறையாக, ஒதுக்கீடு பெற்று வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இந்த மனைகளை பயன்படுத்தி, அத்தியாவசிய தேவைக்கு, கல்வி மற்றும் வீட்டுக் கடன் போன்றவற்றை பெறும் வகையில், சிட்டா அடங்கலில் சேர்க்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து நாவிதர் சமுதாயத்தைச் சேர்ந்த, 343 பேருக்கு, 1994 ம் ஆண்டு, இலவச வீட்டு மனைகள், கொசப்பூரில் வழங்கப்பட்டன. இங்கு, பலரும் ஒதுக்கீட்டின் போதே போலி ஆவணங்கள் சமர்பித்து இடம் பெற்றுள்ளனர்.

அதன்படி, பல உரிமையாளர்கள் வெளியூரில் வசிக்கின்றனர். சில இடங்கள் முறைகேடாக மாற்று சமுதாயத்தினருக்கும் விற்கப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் பத்திரப்பதிவு துறையின் மெத்தனம் காரணமாவே, இந்த தவறுகள் நிகழ்ந்துள்ளது.

இதனால், உரிய பயனாளிகளுக்கு பட்டா கிடைக்காமல் தவிப்பிற்கு ஆளாகியுள்ளோம். அதிகாரிகள் ஆய்வு செய்து, உரியவர்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சி.மூர்த்தி, 74,

தியாகி விஸ்வநாத தாஸ் நகர்,

கொசப்பூர், மணலி.

பட்டா பெறுவதில் சிக்கல் செய்திக்கு அதிகாரி தகவல்

கொசப்பூர் தியாகி விஸ்வநாத தாஸ் நகரில், ஆதிதிராவிட நலத்துறை சார்பில், இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அந்த துறைக்கு ஆவணங்கள் கோரி, கடிதம் அனுப்பியிருக்கிறோம். அதுமட்டுமின்றி, நேரடியாக சென்று விசாரிக்கும் வகையில், ஊழியர் நியமித்துள்ளோம். விரைவில், ஆவணங்கள் கிடைக்கும் பட்சத்தில், இந்த இடங்கள் எந்த அடிப்படையில், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான விதிகள் என்னென்ன ; அதை மீறி இடங்கள் விற்பனை செய்யப்பபட்டுள்ளதா என்பது தெரியவரும். அதன்பின்பே, இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

- வருவாய் துறை அதிகாரி.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us