/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4,500 பாம்புகளை பிடிக்க இருளர் சங்கத்துக்கு அனுமதி
/
4,500 பாம்புகளை பிடிக்க இருளர் சங்கத்துக்கு அனுமதி
4,500 பாம்புகளை பிடிக்க இருளர் சங்கத்துக்கு அனுமதி
4,500 பாம்புகளை பிடிக்க இருளர் சங்கத்துக்கு அனுமதி
ADDED : அக் 19, 2024 06:19 AM

சென்னை : கட்டுவிரியன், சுருட்டை விரியன் வகையை சேர்ந்த, 4,500 பாம்புகளை பிடித்து விஷம் சேகரிக்க, திருவண்ணாமலை இருளர் கூட்டுறவு சங்கத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
பாம்பு கடித்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வாக, விஷ முறிவு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. விஷ முறிவு மருந்துகள் தயாரிப்பதற்கு, பாம்புகளின் விஷம் தான் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இதற்காக, குறிப்பிட்ட பிரிவினர், இவ்வகை பாம்புகளை பிடித்து, விஷம் சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
திருவண்ணாமலையை சேர்ந்த இருளர் பாம்பு பிடிப்போர் வாழ்வாதார மற்றும் தொழில் கூட்டுறவு சங்கம், இதற்கு அனுமதி கேட்டு வனத்துறையிடம் விண்ணப்பித்திருந்தது.
அதன் அடிப்படையில், ஆண்டுக்கு, 1,000 சுருட்டை விரியன், 500 கட்டுவிரியன் வீதம், மூன்று ஆண்டுகளில், 4,500 பாம்புகளை பிடிக்க, இந்த சங்கத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில், கட்டுவிரியன் பாம்புக்கு, தலா 150 ரூபாய், சுருட்டைவிரியன் பாம்புக்கு, தலா 100 ரூபாய் வீதம் உரிம கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த அனுமதி, 2024 - 25 முதல், 2026 - 27 வரை அமலில் இருக்கும் என, வனத்துறை அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

