/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரத்தில் நிற்காத 6 விரைவு ரயில்கள் பெயருக்கு தானா 3வது முனையம்?
/
தாம்பரத்தில் நிற்காத 6 விரைவு ரயில்கள் பெயருக்கு தானா 3வது முனையம்?
தாம்பரத்தில் நிற்காத 6 விரைவு ரயில்கள் பெயருக்கு தானா 3வது முனையம்?
தாம்பரத்தில் நிற்காத 6 விரைவு ரயில்கள் பெயருக்கு தானா 3வது முனையம்?
ADDED : ஜன 23, 2025 11:55 PM
சென்னை : எழும்பூரில் இருந்து விழும்புரம் வழியாக, தினமும் 40 முதல் 45 விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான விரைவு, அதிவிரைவு ரயில்கள் தாம்பரத்தில் நின்று செல்லும்.
ஆனால், வட மாநிலங்களில் இருந்து புதுச்சேரி, ராமேஸ்வரம் செல்லும் ஆறு விரைவு ரயில்கள், தாம்பரத்தில் நிற்பதில்லை. மாறாக, எழும்பூருக்கு அடுத்து மூன்று ரயில்கள் செங்கல்பட்டு மற்றும் மூன்று ரயில்கள் விழுப்புரம் ரயில் நிலையங்களில் நிற்கின்றன.
திரும்பி வரும்போதும் இதேபோன்று தான் நிற்கிறது. இதனால், தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் வசிப்போர் மிகவும் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக, எழும்பூர் செல்ல முடியாமல் ரயிலை தவற விடும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.
எழும்பூரில் இருந்து புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம் நின்று செல்லும் வைகை, குமரி உள்ளிட்ட அதிவிரைவு ரயில்களில், விழுப்புரம் செல்ல 2:10 மணி பயண நேரம். ஆனால், தாம்பரம், செங்கல்பட்டில் நிற்காமல் செல்லும் அதிவிரைவு ரயில்களில் 2:30 மணி நேரத்திற்கு மேலாகிறது.
தாம்பரம் மூன்றாவது முனையமாக மாற்றப்பட்ட பின், தாம்பரத்தில் இருந்து இயக்கும் விரைவு ரயில்கள் அதிகரித்துள்ளன. அதேபோல், வந்தேபாரத் ரயிலும் நின்று செல்கின்றன. மேற்கண்ட விரைவு ரயில்களையும், 2 நிமிடம் நின்று செல்லும் வகையில், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர்.

