/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சைபர் குற்றப்பிரிவு புதிய கட்டடம் அறிவிப்பு நிலையிலேயே உள்ளதா?
/
சைபர் குற்றப்பிரிவு புதிய கட்டடம் அறிவிப்பு நிலையிலேயே உள்ளதா?
சைபர் குற்றப்பிரிவு புதிய கட்டடம் அறிவிப்பு நிலையிலேயே உள்ளதா?
சைபர் குற்றப்பிரிவு புதிய கட்டடம் அறிவிப்பு நிலையிலேயே உள்ளதா?
ADDED : ஏப் 13, 2025 02:49 AM
சென்னை:சென்னை அசோக் நகர் நடேசன் சாலையில், காவலர் பயிற்சி கல்லுாரி செயல்பட்டு வந்தது. இக்கல்லுாரி, இரண்டு ஆண்டுகளுக்கு முன், சென்னை அருகே, ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் உயர் பயிற்சியகத்திற்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, அசோக் நகர் காவலர் பயிற்சி கல்லுாரி செயல்பட்ட கட்டடம், பொருளாதார குற்றப்பிரிவு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு, சைபர் குற்றப்பிரிவு அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்டது.
காவலர் பயிற்சி கல்லுாரிக்கு ஒதுக்கப்பட்ட வளாகம் போலீசாரின் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டு உள்ளது.
அந்த இடத்தில், 'சைபர் குற்றப்பிரிவுக்கு, 20 கோடி ரூபாயில் புதிதாக நிர்வாக கட்டடம் கட்டப்படும்' என, 2022 - 2023ல், சட்டசபையில் அரசு அறிவித்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
சைபர் குற்றப்பிரிவுக்கு, புதிதாக நிர்வாகக் கட்டடம் கட்டப்படும் என, அறிவிப்பு வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், பணிகள் துவங்கப்படவில்லை. அறிவிப்பு நிலையிலேயே உள்ளதா என, சந்தேகம் எழுகிறது.
காவலர் பயிற்சி கல்லுாரி செயல்பட்ட கட்டடமும் இடிந்து விழுகிறது. மின்துாக்கியும் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால், தற்போது போலீஸ் அதிகாரிகளின் பயன்பாட்டிற்கு, புதிதாக மின் துாக்கி அமைக்கும் பணி நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

