/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூட்டுறவு சங்கத்தில் ரூ.3 கோடி முறைகேடு ஊழியர்களை காப்பாற்றுகிறதா ஆளுங்கட்சி?
/
கூட்டுறவு சங்கத்தில் ரூ.3 கோடி முறைகேடு ஊழியர்களை காப்பாற்றுகிறதா ஆளுங்கட்சி?
கூட்டுறவு சங்கத்தில் ரூ.3 கோடி முறைகேடு ஊழியர்களை காப்பாற்றுகிறதா ஆளுங்கட்சி?
கூட்டுறவு சங்கத்தில் ரூ.3 கோடி முறைகேடு ஊழியர்களை காப்பாற்றுகிறதா ஆளுங்கட்சி?
ADDED : ஜூன் 23, 2025 01:31 AM
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் காஸ் சிலிண்டர் கிளைகளில், மூன்று கோடி ரூபாய் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முறைகேடில் சிக்கிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஆளுங்கட்சி தொழிற்சங்கம் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டின் கீழ், சென்னை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காஸ் சிலிண்டர் கிளைகள் இயங்குகின்றன.
இந்த சங்கத்தின் கீழ் உள்ள காஸ் சிலிண்டர் கிளைகளில் ஆன்லைன் வர்த்தகத்தில், இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு செலுத்தியதாக கூறி, 1 கோடியே, 52 லட்சத்து, 89,550 ரூபாய் கையாடல் செய்திருப்பதை அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.
சென்னை ஆலந்துார் கிளையில், உதவி போலீஸ் கமிஷனர் பெயரில், 4,032 சிலிண்டர்கள் முறைகேடாக வெளிசந்தையில் விற்கப்பட்டதை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். ஆலந்துார் கிளையில், 45 லட்சம் ரூபாய்; மாம்பலம் கிளையில், 50 லட்சத்து, 27,657 ரூபாய்; சேப்பாக்கம் கிளையில், 26 லட்சம் ரூபாயும் முறைகேடு செய்திருப்பது, உரிய ஆவணங்களுடன் சமர்பிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் முறைகேடுகளில் ஈடுப்பட்டுள்ள ஊழியர்கள் சிலரிடம், அபராத தொகை வசூலிக்கப்பட்டது. சில ஊழியர்கள் அபராத தொகையையும் கட்டாமல், ஒரு கோடியே, 42 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளனர்.
முறைகேட்டில் ஈடுப்பட்ட ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்கள் அதே கிளைகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பலர், தி.மு.க., தொழிற்சங்கத்தில் இருப்பதால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கூட்டுறவுத்துறை துறை அதிகாரிகளும், தொழிற்சங்க நிர்வாகிகளும் காப்பாற்றி வருவதாக, அங்கு பணியாற்றும் பிற ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்த புகாரை முதல்வர் தனிப்பிரிவுக்கும் அவர்கள் அனுப்பியுள்ளனர்.
- நமது நிருபர் -

