/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இஸ்கான் கோடை முகாம் நாளை துவக்கம்
/
இஸ்கான் கோடை முகாம் நாளை துவக்கம்
ADDED : ஏப் 27, 2025 03:16 AM
சென்னை:'இஸ்கான்' சென்னை அமைப்பு சார்பில், கோடை கால சிறப்பு முகாம் நாளை துவங்குகிறது.
ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் வாயிலாக நடத்தப்படும் இந்த முகாமில், 6 வயது முதல் 17 வயதுடையவர்கள் பங்கேற்கலாம்.
இதில், குழந்தைகளுக்கு கதைகள், ஸ்லோகங்கள், வரைகலை, கைவினை பயிற்சிகள், நெருப்பில்லா சமையல், விளையாட்டு மற்றும் கீர்த்தனைகள் சொல்லித்தரப்பட உள்ளன.
மேலும் ஒரு நிமிட கலந்துரையாடல், விவாதங்கள், ஆய்வு மன வரைபடங்கள் சொல்லித்தரப்பட உள்ளன. முகாம், வார இறுதி நாட்கள் தவிர்த்து, 10 நாட்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடக்கிறது.
மேலும் விபரங்களுக்கு, 80725 99295 என்ற எண்ணிலும், www.iskconchennai.org/summercamp என்ற இணையதளத்திலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

