/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரு தீயணைப்பு நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் வழங்கல்
/
இரு தீயணைப்பு நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் வழங்கல்
இரு தீயணைப்பு நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் வழங்கல்
இரு தீயணைப்பு நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் வழங்கல்
ADDED : அக் 05, 2024 12:17 AM

அசோக் நகர், இந்தியாவில் முதல் முறையாக, அசோக் நகர் மற்றும் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையங்களுக்கு, ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்வு நேற்று மாலை, அசோக் நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நடந்தது.
இந்திய தர நிர்ணய ஆணைய தலைவர் பிரமோத் குமார் திவாரி சான்றிதழ்களை வழங்க, தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை துணை இயக்குனர் ஆபாஷ் குமார் பெற்றுக் கொண்டார்.
தீயணைப்பு துறை இயக்குனர் ஆபாஷ் குமார் கூறியதாவது:
இந்தியாவில் முதல் முறையாக, தமிழகத்தில் சென்னை அசோக் நகர் மற்றும் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையங்களுக்கு, ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் கிடைத்தது பெருமையாக உள்ளது. தமிழகத்தில் உள்ள பிற நிலையங்களுக்கும், பிற துறைகளுக்கும், இது ஊக்கமாக இருக்கும்.
தீபாவளிக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு பட்டாசு ஆலைகள் விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது. வடகிழக்கு பருவ மழைக்காலத்தையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.