/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
1,873 கட்டட அனுமதி விபரங்கள் வெளியீடு
/
1,873 கட்டட அனுமதி விபரங்கள் வெளியீடு
ADDED : அக் 19, 2024 12:43 AM
சென்னை,
சென்னை பெருநகரில், 2016 முதல் 2021 வரை அளிக்கப்பட்ட, 1,873 கட்டட அனுமதி விபரங்களை, சி.எம்.டி.ஏ., பொது மக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளது. சென்னையில் நகர், ஊரமைப்பு சட்டப்படி, அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கு, சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளிக்கிறது. இதன்படி, 2006 முதல் அளிக்கப்பட்ட, டிஜிட்டல் வடிவிலான கட்டட அனுமதி விபரங்கள், பொதுமக்கள் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், 1989 முதல் 2005 வரையிலான காலத்தில் வழங்கப்பட்ட, கட்டட அனுமதி தொடர்பான ஆவணங்களை, டிஜிட்டல் முறைக்கு மாற்றும் பணிகள் கடந்த ஆண்டு முடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, 2016 முதல் 2021 வரையிலான காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட, 1,873 கட்டட அனுமதி விபரங்களை, சி.எம்.டி.ஏ., தற்போது வெளியிட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கான கட்டட அனுமதி விபரங்கள், அந்தந்த ஆண்டுகளில் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருந்தாலும், அப்போது முழுமையாக தகவல்கள் கிடைக்காத நிலை இருந்தது.
தற்போது, கட்டட அனுமதி உத்தரவு, வரைபடம், கட்டணங்கள் விபரம், அதற்கான ரசீது, கட்டுமான பணி உரிமம் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.