/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் சக்கரத்தில் சிக்கி ஐ.டி., ஊழியர் பலி
/
பஸ் சக்கரத்தில் சிக்கி ஐ.டி., ஊழியர் பலி
ADDED : நவ 22, 2025 04:05 AM

ராயபுரம்:: பழைய வண்ணாரப்பேட்டையில்: மோதி: உயிரிழந்தார்.: பழைய வண்ணாரப் பேட்டை, ஜெயராம் தெருவைச் சேர்ந்தவர் ஜியாயுல்லா, 32; ஐ.டி., ஊழியர். இவர், நேற்று ப ழைய வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலை வழியாக நடந்து சென்றார்.
அப்போது, அதே வழியாக, டோல்கேட்டில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்ற, தடம் எண் '6டி' மாநகர பேருந்து, கல்லறை சாலையில் திரும்பியபோது, ஜியாயுல்லா மீது மோதியது.
அதில், பேருந்து சக்கரத்தில் சிக்கிய அவர், ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவ ரை மீட்டு அருகில் இ ருந்தோர், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து, வண்ணாரப்பேட்டை புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, மாநகர பேருந்து ஓட்டுநர் சுந்தர்ராஜன், 58, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

