/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிப்பறையில் வழுக்கி விழுந்த ஐ.டி., ஊழியர் பலி
/
கழிப்பறையில் வழுக்கி விழுந்த ஐ.டி., ஊழியர் பலி
ADDED : டிச 13, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி: ஆந்திரா மாநிலம், நரசாரூர்பேட்டையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 37. திருமணமாகவில்லை.
சில மாதங்களுக்கு முன், ஓ.எம்.ஆரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். சோழிங்கநல்லுார், வில்லேஜ் பிரதான சாலையில் உள்ள ஆண்கள் விடுதியில் தங்கி இருந்தார்.
கடந்த 9ம் தேதி, கழிப்பறையில் வழுக்கி விழுந்து, தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார். செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

