/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கண்டலேறு அணையில் பூண்டிக்கு நீர்வரத்து புழல், செம்பரம்பாக்கத்திற்கு திருப்ப முடிவு
/
கண்டலேறு அணையில் பூண்டிக்கு நீர்வரத்து புழல், செம்பரம்பாக்கத்திற்கு திருப்ப முடிவு
கண்டலேறு அணையில் பூண்டிக்கு நீர்வரத்து புழல், செம்பரம்பாக்கத்திற்கு திருப்ப முடிவு
கண்டலேறு அணையில் பூண்டிக்கு நீர்வரத்து புழல், செம்பரம்பாக்கத்திற்கு திருப்ப முடிவு
ADDED : செப் 22, 2024 08:45 PM
சென்னை:கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வரும் நீரை, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திருப்ப, நீர்வளத்துறை முடிவெடுத்து உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், தேர்வாய்கண்டிகை ஏரிகள் வாயிலாக, சென்னையில் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இதில் பூண்டி, சோழவரம் ஏரிகளில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லை. எனவே, இந்த ஏரிகளுக்கு வரும் நீர், செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதற்காக, கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பூண்டி ஏரிக்கு, ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., நீர் திறக்க வேண்டும். தெலுங்கானா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் போது, கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
அந்த நேரத்தில், கண்டலேறு அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும். ஆந்திரா நெல்லுார் மாவட்டத்தின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, கிருஷ்ணா கால்வாயில் நீர் திறக்கப்படும்.
இந்த நீர், பூண்டி ஏரிக்கும் வந்து சேரும். தற்போது, கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர் திறக்கப்பட்டு உள்ளது.
இந்த நீரை, முழுமையாக பூண்டி ஏரியில் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆக., மாதம் அவசர கதியில் துவங்கிய,'ஷட்டர்' சீரமைப்பு பணிகள், புதிய நீரளவை அமைக்கும் பணிகள், இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இதனால், பூண்டி ஏரிக்கு வரும் நீரை, செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளுக்கு கால்வாய் வாயிலாக திருப்ப, நீர்வளத்துறை முடிவெடுத்து உள்ளது. நீர்வரத்தின் அளவைப் பொறுத்து, தேர்வாய்கண்டிகை ஏரியில் அதை சேமிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.