/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஜாக்கி பிராண்ட்' ஆடை 'செகண்ட் சேல்' விற்பனை
/
'ஜாக்கி பிராண்ட்' ஆடை 'செகண்ட் சேல்' விற்பனை
ADDED : ஜூலை 24, 2025 12:33 AM
சென்னை, 'ஜாக்கி பிராண்ட்' ஆடைகள் 'செகண்ட் சேல்' விற்பனையில் 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னையில் பல்வேறு இடங்களில், 'ஜாக்கி பிராண்ட்' கடைகளில், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கான உள்ளாடைகள் உட்பட, பல வகையான ஆடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஜாக்கி பேக்டரி, சமீபத்தில் அறிவித்துள்ள 'செகண்ட் சேல்' விற்பனை, வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அண்ணா நகர் டி.கே.கல்யாண மண்டபம்; கதீட்ரல் ரோடு டாஸ் கம்யூனிட்டி ஹால், எழும்பூர் கில்ட் ஆப் சர்வீஸ்; அம்பத்துார் அருள்ஜோதி கல்யாண மண்டபம், அசோக் நகர் லட்சுமி ஹால், சோழிங்கநல்லுார் கே.வி.எல்.கல்யாண மஹால் ஆகியவற்றில், செகண்ட் சேல் விற்பனை நடக்கிறது. இங்கு, 50 சதவீதம் வரை தள்ளுபடியில் ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இது தவிர, ரேமண்ட், பார்க் அவென்யூ பிராண்ட் ஆடைகள், பெண்களுக்கான ஆடைகள், 75 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது. இதை, வாடிக்கையாளர்கள் ஆர்வமாக வந்து வாங்கி செல்கின்றனர் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.