/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2.96 கோடியில் தரம் உயர்த்தப்படும் ஜல்லடியன்பேட்டை அரசு பள்ளி
/
2.96 கோடியில் தரம் உயர்த்தப்படும் ஜல்லடியன்பேட்டை அரசு பள்ளி
2.96 கோடியில் தரம் உயர்த்தப்படும் ஜல்லடியன்பேட்டை அரசு பள்ளி
2.96 கோடியில் தரம் உயர்த்தப்படும் ஜல்லடியன்பேட்டை அரசு பள்ளி
ADDED : ஏப் 23, 2025 12:50 AM
ஜல்லடியன்பேட்டை, பெருங்குடி மண்டலம், ஜல்லடியன்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில், 700 மாணவர்கள் ஆங்கிலம், தமிழ் வழி கல்வியில் பயின்று வருகின்றனர்.
தமிழக அரசின் சார்பில், சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்களை அகற்றி, புதிய கட்டடங்கள் அமைக்கவும், பள்ளிகளை தரம் உயர்த்தி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாணவர்கள் அமர போதுமான வகுப்பறைகள் இல்லாததால், மூன்று புதிய வகுப்பறைகள் கட்ட, ஜல்லடியன்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்று, அமைச்சர் மேம்பாட்டு நிதியின் கீழ், 2.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தி, 9 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்ட டெண்டர் கோரப்பட்டுள்ளது என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.