/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபாலில் ஜேப்பியார் 'சாம்பியன்'
/
வாலிபாலில் ஜேப்பியார் 'சாம்பியன்'
ADDED : செப் 29, 2024 12:34 AM

சென்னை, சென்னை ஐ.ஐ.டி., சார்பில் மாநில அளவிலான வாலிபால் போட்டி, கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி., வளாகத்தில் நடந்தது. இதில், ஜேப்பியார், ஐ.ஐ.டி., சென்னை உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. போட்டிகள், நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடந்தன.
இதில் 'லீக்' சுற்றில், ஜேப்பியார் பல்கலை அணி, 25 - 11, 25 - 23, 25 - 13 என்ற கணக்கில் ஐ.ஐ.டி., சென்னையை வீழ்த்தியது. மற்ற இரண்டு லீக் சுற்றுகளில், ஜேப்பியார் அணி, 25 - 13, 25 - 17, 25 - 15 என்ற கணக்கில் நாசரேத் அணியையும், 25 - 17, 21 - 25, 25 - 22, 25 - 14 என்ற கணக்கில் குருநானக் அணியையும் வீழ்த்தியது.
அனைத்து 'லீக்' சுற்றுகள் முடிவில், ஜேப்பியார் பல்கலை அணி முதலிடத்தையும், நாசரேத் மற்றும் சென்னை ஐ.ஐ.டி., அணி முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களையும் கைப்பற்றின.