/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால்பந்தில் இறுதிவரை மல்லுக்கடிய ஜவஹர் சாக்கர் - நீலகிரி அணிகள்
/
கால்பந்தில் இறுதிவரை மல்லுக்கடிய ஜவஹர் சாக்கர் - நீலகிரி அணிகள்
கால்பந்தில் இறுதிவரை மல்லுக்கடிய ஜவஹர் சாக்கர் - நீலகிரி அணிகள்
கால்பந்தில் இறுதிவரை மல்லுக்கடிய ஜவஹர் சாக்கர் - நீலகிரி அணிகள்
ADDED : ஆக 22, 2025 12:28 AM
சென்னை, தென்னிந்திய வெட்ரன்ஸ் கால்பந்தின் இறுதி போட்டியில், கடுமையாக போராடிய நீலகிரி வெட்ரன்ஸ் அணி, ஒரு கோல் வித்தியாசத்தில், ஜவஹர் சாக்கர் அணியிடம் வெற்றியை இழந்தது.
நியூ பட்டாபிராம் வெட்ரன்ஸ் கால்பந்து சங்கம் சார்பில், தென்னிந்திய வெட்ரன்ஸ் கால்பந்து போட்டி, ஆவடி நாசரேத் கல்லுாரியில், கடந்த மூன்று நாட்களாக நடந்தது. அதில், தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து 12 அணிகள் பங்கேற்றன.
இதன் இறுதி போட்டியில், நீலகிரி வெட்ரன்ஸ் அணியும், தெலுங்கானாவின் ஜவஹர் சாக்கர் கிளப் அணியும் மோதின. துவக்கம் முதலே விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில், இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
பின், 'டை பிரேக்கர்' முறையில் ஒரு கோல் அடித்து, 4:3 என்ற என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜவஹர் சாக்கர் கிளப் அணி, சாம்பியன் பட்டத்தை வென்றது.
நீலகிரி வெட்ரன்ஸ் அணி 'ரன்னர் அப்' ஆக, இரண்டாம் பரிசையும், நியூ பட்டாபிராம் வெட்ரன்ஸ் கால்பந்து சங்ம் மூன்றாம் பரிசையும் வென்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனர் அருணன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

