/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாட்டிய நாடகத்தில் சிவன் கதைகளை அழகாய் விவரித்த ஜெயந்தி குழுவினர்
/
நாட்டிய நாடகத்தில் சிவன் கதைகளை அழகாய் விவரித்த ஜெயந்தி குழுவினர்
நாட்டிய நாடகத்தில் சிவன் கதைகளை அழகாய் விவரித்த ஜெயந்தி குழுவினர்
நாட்டிய நாடகத்தில் சிவன் கதைகளை அழகாய் விவரித்த ஜெயந்தி குழுவினர்
ADDED : டிச 31, 2024 12:54 AM

சிவன், அம்பாளிடம் மோட்சத்தின் நிலையை விளக்கி 'ஓம்' எனும் மந்திர உபதேசம் செய்ய, இருவரும் தியானத்தில் மூழ்குகின்றனர். அப்போது, அங்கு வந்த மயிலின் மீது அம்பாள் கவனம் செல்கிறது.
இதை கண்டு கோபமடைந்த ஈசன், 'மயிலாக போவாய்' என, அம்பாளிற்கு சாபம் விடுகிறார். அதற்கு விமோசனமாக, மயிலாய் சென்று சிவலிங்கத்திற்கு பூஜை செய்தால், என்னை வந்து சேர்வாய் எனவும் கூறுகிறார். அதேபோல், புன்னை வனநாதரை மயிலாய் சென்று பூஜித்ததும், அம்பாளை சிவன் ஏற்கிறார்.
இந்நிகழ்வை, திருவான்மியூர் பாபலால் பவன் அரங்கில், 'கபாலி அறுபத்து மூவர்' நாட்டியம் வழியே அற்புதமாக விளக்கினர், ஜெயந்தி சுப்ரமணியம் நடன அமைப்பில், கலா தர்ஷனா குழுவினர். மயில் நடனத்தையும், அம்பாளின் பூஜையையும் கலைஞர்கள் செய்தவிதம், அரங்கில் இருந்தோரை பெரிதும் கவர்ந்தது.
அம்மை, அப்பரது தேரின் முன், சிவ வாத்தியக் குழுவினர் மேள தாள வாத்தியங்கள் வாசிப்பதையும், நடன அமைப்பில் கொண்டு வந்தது ஆச்சரியமாக இருந்தது.
தொடர்ந்து, மயில் புடை சூழ வரும் முருகன், ஹரியும், பிரம்மனும், பூத கணங்களும், அனைத்து தெய்வங்களும் காணவரும் அதிகார நந்தி சேவை, பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுப்பதை போன்ற காட்சிகளை, அற்புதமாக நடனத்தில் விளக்கினர்.
பின், காவடி நடனம், அரோகரா கோஷத்தோடு நிகழ 63 நாயன்மார்களின் வருகை 'அடியார்க்கும் அடியேன்' பாடலை வைத்து வெளிப்படுத்தினர். கற்பகாம்பாளும் கபாலியும் வரும் அழகை, அடுக்கடுக்காய் விவரித்தனர். மயிலுடன் வேலவன், மாரியம்மன் வருகையையும் கண்ணில் ஒத்திக்கொள்ளும்படி அமைத்திருந்தனர்.
நிறைவாக திரனா என்ற தில்லானாவோடு, சிவனும் பார்வதியுமாய், இருவர் இருவராய் இணைந்து குழுவினர் ஆடிட, அவர்களது திருமண நிகழ்வும் சஞ்சாரியாக அற்புத கோர்வைகளோடு நிறைவடைந்தது.
- மா.அன்புக்கரசி.