/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜே.இ.இ., தேர்வு பயிற்சி ஆகாஷ் இன்விக்டஸ் துவக்கம்
/
ஜே.இ.இ., தேர்வு பயிற்சி ஆகாஷ் இன்விக்டஸ் துவக்கம்
ADDED : பிப் 07, 2025 12:38 AM
சென்னை, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும், ஜே.இ.இ., பொது நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், ஆகாஷ் கல்வி நிறுவனம், 'இன்விக்டஸ்' என்ற பயிற்சி மையத்தை துவக்கி உள்ளது.
இது குறித்து, ஆகாஷ் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தீபக் மெஹ்ரோத்ரா கூறியதாவது:
ஆகாஷ் இன்விக்டஸ் கல்வி நிறுவனம், பல ஆண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர்களால் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் கல்வி கற்பிக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் துவக்கிய இத்திட்டத்தில், 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இத்திட்டம், பிளஸ் 1 மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகவும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளாகவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை மட்டுமின்றி டில்லி, சத்தீஸ்கர், லக்னோ, மீரட், பிரயாக்ராஜ், கான்பூர், வாரணாசி, ஜெய்ப்பூர், கோல்கட்டா, புவனேஸ்வர், மும்பை, புனே, நாக்பூர், பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களிலும் இந்த மையங்கள் செயல்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

