/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.5.49 கோடி மோசடி நகை கடைக்காரர் கைது
/
ரூ.5.49 கோடி மோசடி நகை கடைக்காரர் கைது
ADDED : ஏப் 03, 2025 11:57 PM
சென்னை, போரூரைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவர், வளசரவாக்கத்தில் நகை கடை நடத்தி வந்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன், 70 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், ஆந்திராவில் பதுங்கி இருந்த ஆனந்தகுமார் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஆனந்தகுமார் தங்களிடம் நகைகளை அடகு வாங்கி மோசடி செய்து விட்டதாக, 40 பேர் வளசரவாக்கம் காவல் நிலையம் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அதேபோல், பண மோசடி செய்ததாக, ஆனந்தகுமார் மீது விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவரும் புகார் அளித்தார்.
இப்புகார்கள், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
விசாரணையில், ஆனந்தகுமார், 40 பேரிடமும், 3.74 கோடி ரூபாய் வரை, தங்க நகைகளை அடகுக்கு வாங்கி, கே.கே.நகரில் உள்ள கடை ஒன்றில், கூடுதல் தொகைக்கு அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. கணேஷ்குமாரிடமும், 1.75 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார்.
இதையடுத்து, மொத்தம், 5.49 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, ஆனந்தகுமாரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

