/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஜுவல்லர்ஸ் சாம்பியன் லீக்' போட்டி பெரம்பூரில் கோலாகல துவக்கம்
/
'ஜுவல்லர்ஸ் சாம்பியன் லீக்' போட்டி பெரம்பூரில் கோலாகல துவக்கம்
'ஜுவல்லர்ஸ் சாம்பியன் லீக்' போட்டி பெரம்பூரில் கோலாகல துவக்கம்
'ஜுவல்லர்ஸ் சாம்பியன் லீக்' போட்டி பெரம்பூரில் கோலாகல துவக்கம்
ADDED : நவ 16, 2025 02:54 AM

சென்னை: 'ஜுவல்லர்ஸ் சாம்பியன் லீக்' கிரிக்கெட் போட்டி, சென்னையில் கோலாகலமாக துவங்கியது.
சென்னை நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் சார்பில் ஜுவல்லரிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்காக, ஜெ.சி.எல்., எனும் 'ஜுவல்லர்ஸ் சாம்பியன் கிரிக்கெட் லீக்' போட்டி, பெரம்பூர் எஸ்.பி.ஆர்., சிட்டியில், நேற்று துவங்கின.
இரண்டு நாள் நடக்கும் இப்போட்டிகளை, 'ஜிடோ பிளஸ் சென்னை' தலைவர் பிரமோட்சா சோர்டியா 'டாஸ்' போட்டும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பலுான்களை பறக்க விட்டும், போட்டிகளை துவக்கிவைத்தனர்.
முன்னதாக சிறப்பு விருந்தினர்களுடன் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி, சங்க செயலர் சாந்தகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள் சாம்பியன் கோப்பையை அறிமுகப்படுத்தினர்.
போட்டியில் பங்கேற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் பிரமோட்சா சோர்டியா வாழ்த்து தெரிவித்தார்.
விக்கிரமராஜா பேசுகையில், ''எந்நேரமும் வேலையாக உள்ள நமக்கு, இதுபோன்ற விளையாட்டுகள் அவசியமானது. விளையாடுவதால் நம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது,'' என்றார்.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி, எட்டு ஓவர்கள் அடிப்படையில் நடக்கின்றன. லீக் சுற்றுகளின் முடிவில் அடுத்த சுற்று மற்றும் இறுதிப்போட்டிகள் இன்று நடக்க உள்ளன.

