/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய இருவர் பிடிபட்டனர்
/
மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய இருவர் பிடிபட்டனர்
ADDED : நவ 16, 2025 02:45 AM
கொடுங்கையூர்: மாநகராட்சி தற்காலிக ஊழியர்களை தாக்கிய இருவரை, போலீசார் கைது செய்தனர்.
கொடுங்கையூர், நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ், 25. இவர், தண்டையார்பேட்டை மண்டலத்தில், தற்காலிக மின் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 8ம் தேதி, சக ஊழியரான விஸ்வநாதன் என்பவர், மது அருந்தி வந்துள்ளார். அதை, மாநகராட்சி ஆய்வாளரிடம் தகவல் தெரிவித்ததால், விஸ்வநாதனை பணி நீக்கம் செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த விஸ்வநாதனின் மனைவி சத்யா, ராஜேஷிடம் தகராறில் ஈடுபட்ட நிலையில், அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், ராஜேஷ் மற்றும் அங்கு பணியில் இருந்த விமல் ஆகியோரை, கல்லால் சரமாரியாக தாக்கி தப்பினர். படுகாயமடைந்த இருவரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து சம்பவத்தில் ஈடுபட்ட, கொடுங்கையூர், சின்னாண்டி மடத்தைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சஞ்சய், 20, முத்துகண்ணன், 21, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.

