/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எழும்பூரில் டிராலியுடன் கேட்பாரற்று கிடந்த ரூ.3.75 லட்சம் நகை, பணம் ஒப்படைப்பு

ADDED : ஏப் 17, 2025 12:10 AM

சென்னை,மயிலாப்பூரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர், தன் குடும்பத்துடன் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் செல்ல, எழும்பூர் ரயில் நிலையம் வந்தார். ராமேஸ்வரத்தில் இருந்து எழும்பூர் வழியாக பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூருக்கு செல்லும் விரைவு ரயிலில், பயணம் மேற்கொண்டனர்.
ரயிலில் செல்லும்போது, அவசரத்தில் 'டிராலி சூட்கேஸ்' தவற விட்டு சென்றதை அறிந்து, ரயில்வேயின் 'ரயில் மதாத்' என்ற செயலியில் புகார் அளித்தார்.
அதில் தன், ரயில் எண், பி.என்.ஆர்., எண், பெட்டி எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிவித்தார். அவரது புகாரை அடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் எழும்பூர் ரயில் நிலையம் நடைமேடை - 7ல் இருந்த டிராலி சூட்கேசை கண்டறிந்தனர்.
புகார்தாரரிடம், சூட்கேஸ் குறித்த விபரங்கள் பெற்று உறுதிப்படுத்தினர். அதில், 2.26 லட்சம் ரூபாய் மற்றும் 1.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 கிராம் நகை இருந்தது. இதன் மொத்த மதிப்பு 3.75 லட்சம் ரூபாய்.
பின்னர், புகார்தாரரின் கோரிக்கை ஏற்று, அந்த டிராலி சூட்கேஸை அவரது உறவினரான ஸ்ரீ மகரம் என்பவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். புகார் அளித்த சில மணி நேரத்தில், பயணியரின் நகை, பணத்தை பாதுகாப்பாக மீட்டு கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.