/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குற்ற வழக்கில் மீட்கப்பட்ட நகை, பணம் ஒப்படைப்பு
/
குற்ற வழக்கில் மீட்கப்பட்ட நகை, பணம் ஒப்படைப்பு
ADDED : டிச 12, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி,ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், இந்தாண்டு இதுவரை கூட்டு கொள்ளையில் ஈடுபட்ட 28 பேர் கைது செய்யப்பட்டு, 1 கிலோ தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கொள்ளை மற்றும் கூட்டு கொள்ளை வழக்கில், 231 பேர் கைது செய்யப்பட்டு, 284 சவரன் தங்க நகை மற்றும் 18 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், செயின் பறிப்பு, வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கில், 127 பேர் கைது செய்யப்பட்டு, 71 சவரன் தங்க நகை மற்றும் 894 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சொத்துக்களை, உரிமையாளர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

