ADDED : ஜன 30, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடக்க உள்ளது.
பிப்., 5 முதல் 14ம் தேதி வரை, தினமும் காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை நடக்க உள்ளது.
பயிற்சியில், தங்கம், செம்பு, வெள்ளி, பிளாட்டினம் ஆகிய உலோக தரம் அறிதல், உரைகல் பயன்படுத்தும் முறை, தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை, ஆசிட் பயன்படுத்துதல், எடை அளவு இணைப்பான், தங்கம் தரம் அறிதல், போலி நகைகளை அடையாளம் காணும் முறை ஆகியவை கற்று தரப்படும்.
கட்டணம் 15,000 ரூபாய். பயிற்சி குறித்து, கூடுதல் விபரங்களை, www.editn.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், அலுவலக நேரத்தில், 044 - 2225 2081, 70101 43022 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.