/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ்சில் 2 மூதாட்டியரிடம் நகை திருட்டு
/
பஸ்சில் 2 மூதாட்டியரிடம் நகை திருட்டு
ADDED : ஆக 04, 2025 02:44 AM
சென்னை:வியாசர்பாடி, ஜெ.ஜெ.ஆர்., நகரைச் சேர்ந்தவர் சாந்தா, 60. இவர், வியாசர்பாடி, சூழ்
புனல்கரை பகுதியில் வசிக்கும், தன் மூன்றாவது மகளான பாக்கியலட்சுமி வீட்டிற்கு, நேற்று சென்றார். அப்போது, தான் அணிந்திருந்த
கம்மல், செயின் உள்ளிட்ட மூன்றரை சவரன் நகைகளை கழற்றி, கைப்பையில் வைத்துள்ளார்.
பின், மகள் வீட்டில் இருந்து தன் வீட்டிற்கு வருவதற்காக, தடம் எண்: 57 மாநகர பேருந்தில் ஏறினார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கைப்பையில் இருந்த நகைகள் திருடு போயிருந்தன. இது குறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல, கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ருக்மணி, 62. இவர், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அம்மன் கோவிலுக்கு, ரயில் மூலம் சென்று சென்ட்ரலில் இருந்து மாநகர பேருந்தில் ஏறினார். கூட்ட நெரிசல் அதிகம் இருந்ததால் நின்றபடி பயணித்தார்.
முத்தமிழ் நகர் பேருந்து நிலையம் வந்ததும் இறங்கி, சற்று துாரம் நடந்து சென்றபோது, தன் தாலி செயின் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.