/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூஜை செய்து தருவதாக நகை திருடியவர் கைது
/
பூஜை செய்து தருவதாக நகை திருடியவர் கைது
ADDED : ஜூன் 01, 2025 12:40 AM

சென்னை, மந்தைவெளி, டிரஸ்ட்பாக்கம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 56; கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் அர்த்தநாரி வாயிலாக, பெரவள்ளூர், பெரியார் நகரைச் சேர்ந்த பூர்ண பிரகாஷ், 47, என்பவர் பழக்கமானார்.
கடந்தாண்டு ஆக., 12ம் தேதி ரமேஷ் வீட்டில் பூர்ண பிரகாஷ் பூஜை செய்தபோது, சூனியம் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். உடனே, அதற்கான பரிகார பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி, வீட்டில் வந்து, 9.50 சவரன் நகையை பெற்றுக் கொண்டார்.
மேலும் கோவிலில் வைத்து பூஜை செய்து, நகையை தருகிறேன் எனக்கூறி சென்றவர். வெகுநாட்களாகியும் நகையை திரும்ப தரவில்லை. இதுகுறித்து, ரமேஷ் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரித்த போலீசார் பூர்ண பிரகாஷை நேற்று கைது செய்து, 9 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.