/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணியாளர்களுக்கு 'ஜில்' மோர்
/
துாய்மை பணியாளர்களுக்கு 'ஜில்' மோர்
ADDED : மார் 08, 2026 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் துாய்மைப் பணியாளர்களுக்கு, குளிர்ச்சியான மோர் வினியோகம் நேற்று துவங்கியது.
மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவித்தபடி, துாய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர களப் பணியாளர்களுக்கு, குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டத்தை, மேயர் பிரியா நேற்று துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்தின்படி, மாநகராட்சி பணியாளர்கள் 29,461 பேருக்கும், நாளை முதல் மோர் வழங்கப்பட உள்ளது.
ஆவின் நிறுவனத்திடம் இருந்து, 200 மி.லி., மோர், 8 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து பணியாளர்களுக்கும், வரும் ஜூன் வரை வழங்கப்பட உள்ளது.

