/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேலை வாய்ப்பு முகாம் 1,193 பேருக்கு பணி ஆணை
/
வேலை வாய்ப்பு முகாம் 1,193 பேருக்கு பணி ஆணை
ADDED : பிப் 09, 2025 12:39 AM

சென்னை, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மாதவரத்தில் நேற்று நடந்தது.
இதில், 201 பிரபல தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில் பங்கேற்று பதிவு செய்த 6,524 பேர், பல்வேறு நிறுவனங்களின் நேர்முக தேர்வில் பங்கேற்றனர்.
இதில், தேர்வான 11 மாற்றுத்திறனாளிகள், 510 பெண்கள் உட்பட 1,193 பேருக்கு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், பணி நியமன ஆணை வழங்கினார்.
இவர்களுடன், பல்வேறு நிறுவனங்களில் முதற்கட்ட நேர்முக தேர்வில் பங்கேற்ற 308 பெண்கள் உட்பட 655 பேர் தேர்ச்சி பெற்று, இரண்டாம் கட்ட தேர்வுக்கு தேர்வாகினர்.
மேலும் திறன் பயிற்சிக்காக 88 பேரும், வெளிநாட்டு வேலைக்காக 64 பேரும் பதிவு செய்து உள்ளனர்.
நிகழ்வில், அமைச்சர் கணேசன் கூறுகையில், ''இதுவரை, 177 பெரிய அளவிலும், 1,675 சிறிய அளவிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தியுள்ளோம். முகாமில், 3,777 மாற்றுத்திறனாளிகள் உட்பட 2.31 லட்சம் பேருக்கு, தனியார் துறையில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளன,'' என்றார்.

