sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மனநல பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு வேலை

/

மனநல பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு வேலை

மனநல பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு வேலை

மனநல பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு வேலை


ADDED : ஜூன் 08, 2025 12:11 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை அண்ணாநகரில், 40 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டுவரும், 'ஸ்கார்ப்' எனும் மனச்சிதைவு ஆராய்ச்சி நிறுவனம், அதன் பயனாளிகளின் வேலை வாய்ப்பிற்கு உதவி வருகிறது.

இரண்டு ஆண்டுகளாக இந்த நிறுவனம், தங்களிடம் வரும் பயனாளிகள் மட்டுமின்றி, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள, மனநல சிகிச்சைக்கு உட்பட்டு மீண்டுவந்துள்ள அனைவருக்குமான வேலை வாய்ப்பு உதவி மையத்தை நடத்தி வருகிறது.

இதுவரை, 30 நிறுவனங்களின் உரிமையாளர்கள், வேலை வாய்ப்பு அளித்துள்ளனர். அவர்களின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாக, நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், வரும் 14ம் தேதி சனிக்கிழமையன்று, மனநல சிகிச்சை பெற்று மீண்ட நபர்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

இதில் பங்கேற்க விரும்புவோர், சென்னை, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், வடக்கு பிரதான சாலையில் உள்ள மனச்சிதைவு ஆராய்ச்சி மையத்தை அணுகலாம்.

கூடுதல் தகவலுக்கு, eec@scarfindia.org மின்னஞ்சல், 70103 06290, 95855 28317, 80721 00580 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us