/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவீஸ்வரர் கோவிலில் ஜூலையில் குடமுழுக்கு
/
ரவீஸ்வரர் கோவிலில் ஜூலையில் குடமுழுக்கு
ADDED : ஏப் 06, 2025 07:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி:வியாசர்பாடியில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரவீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மழை வெள்ள பாதிப்பிற்கு உள்ளாவதால், தரை மட்டத்தில் இருந்து, 4 அடிக்கு உயர்த்தும் பணிகள், தற்போது நடந்து வருகின்றன.
அதேநேரம், மூலவர், அம்மன் மகா மண்டபம், நந்தி கொடிமரம், சண்டிகேஸ்வரர் ராஜகோபுரம் உள்ளிட்டவற்றை 8.60 அடி உயரம் உயர்த்த, 2 கோடி ரூபாய் செலவில், நவீன தொழில்நுட்பமான 'ஜாக்கி' உதவியுடன் கோவிலை உயர்த்தும் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.
அனைத்து பணிகளும், ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும் என தெரிகிறது. ஜூலை மாதத்தில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

