/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தியாகராஜ சுவாமி கோவிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம்
/
தியாகராஜ சுவாமி கோவிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம்
தியாகராஜ சுவாமி கோவிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம்
தியாகராஜ சுவாமி கோவிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம்
ADDED : பிப் 23, 2024 12:13 AM
திருவொற்றியூர்,தியாகராஜ சுவாமி கோவில், மாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் இன்று நடைபெறும் நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் மாசி பிரம்மோற்சவம், கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதைத்தொடர்ந்து உற்சவர் சந்திரசேகரர், சூரிய, சந்திர பிரபை, பூதம், சிம்மம், நாகம், அஸ்தமானகிரி, யானை, அதிகார நந்தி, ரிஷபம், குதிரை, இந்திர விமானங்களில் எழுந்தருளி, மாடவீதி உலா வந்தார்.
தேரோட்டம், நேற்று முன்தினம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம், இன்று காலை 9:00 - 10:30 மணிக்குள்ளாக, கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இதில், பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர் என்பதால், கோவில் நிர்வாகம் தரப்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாலையில், 63 நாயன்மார்கள் உற்சவம், இரவு மகிழடி சேவை உள்ளிட்ட வைபவங்கள் நடைபெறும்.
பின், தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவம் நடக்கும். நாளை காலை, கடலாடு தீர்த்தவாரி உற்சவம், இரவு கொடியிறக்கம் நடைபெறும்.
வரும் 25ம் தேதி இரவில், தியாகராஜ சுவாமி கோவில் பந்தம் பறி உற்சவம் - 18 திருநடனத்துடன் திருவிழா நிறைவுறும்.