ADDED : ஜூன் 29, 2025 12:23 AM

சென்னை, காஞ்சி சங்கர மடத்தில் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஜூலை 1ம் தேதி முதல் விஜய யாத்திரை மேற்கொள்கிறார்.
தற்போது, திருப்பதி சங்கரமடத்தில் அருளாசி வழங்கி வரும் அவர், ஜூலை 1ம் தேதி திருப்பதி அடுத்து கோதா கண்டிரிகா யோகா ஆசிரமத்திற்கு விஜயம் செய்து, பூஜைகள் மேற்கொண்டு பக்தர்கSக்கு அருளாசி வழங்குகிறார்.
அங்கிருந்து 2ம் தேதி விழுப்புரம், சங்கர மடத்திற்கு விஜயம் செய்கிறார். சென்னை, பம்மலில் உள்ள சங்கர வித்யாலயாவில் வரும் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தங்கி, பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
வரும், 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை, பெரியபாளையம் அடுத்த தண்டலம், சங்கரா பள்ளிக்கு விஜயம் செய்யும் சுவாமிகள், அங்கு பூஜைகள் நடத்தி அருளாசி வழங்குகிறார். இதையடுத்து, திருப்பதியில் உள்ள காஞ்சி காமகோடி பீட சங்கர மடத்திற்கு விஜயம் செய்கிறார்.